மதராஸ் - லைட்ஹவுஸ்[கள்]
கலங்கரை விளக்கு ஒன்றும் தமிழருக்குப் புதியதே அல்ல.
மாமல்லபுரத்தில் கி.பி ஏழாம் நூற்றாண்டின் கலங்கரை விளக்கு உள்ளது.
கோடியக்ரையில் மிக்க இடிபட்ட தன்மையில் சோழரின் கலங்கரைச் சுவர் ஒன்றும் உள்ளது.
ஆனால் ஆங்கிலேயன் எழுப்பிய கலங்கரை விளக்கு மதராஸுக்கு மிக முக்கியம்.
புயல் மழையினால் மதராஸின் கடல் அலைகள் அடிக்கடி மரக்கலங்களை அலைக்கழித்து பழவேற்காடு அல்லது கோவளம் மணற்கரைகளில் தரைதட்டிச் செய்வது வழக்கம்.
இன்று மரீனாவில் உள்ள லைட் ஹவுஸ் மதராஸின் நான்காம் லைட் ஹவுஸ். கி.பி 18ஆம் நூற்றாண்டில் துறைமுகம் அமையும் முன், கருப்பர் நகரம் நோக்கி வரும் கப்பல்களுக்கு வெளிச்சமே நம்மூர் மீனவர்களும், படகோட்டிகளின் பெண்களும் உயர்த்திக் காட்டும் தீப்பந்தங்கள் தானாம்.
பழங்காலத் துறைமுக விளக்கம்
புனித தாமஸ் மலைச் சிகரம் லைட் ஹவுஸாக விளங்கியதாகச் சில வரலாற்றுப் பதிவுகள் கூறும்.
ஆங்கிலேயரின் முதல் கி.பி 1796ல் ஜார்ஜ் கோட்டக்குள் முதல் லைட் ஹவுஸ் கட்டப்பட்டதாகக் குறிப்புகள் உள்ளன.
இன்று திருவண்ணாமலையில் பயன்படுத்தப்படும் ப்ரம்மாண்ட நெய்த்திரி போல் 12 தேங்காய் எண்ணெய்த் திரிகளில் விளக்கு ஏற்றி இரவு முழுவதும் 99 அடி உயரமான லைட் ஹவுஸ் கப்பல்களுக்கு வழிகாட்டியதாம். சுமார் 25 மைல் தொலைவுக்கு வெளிச்சம் தெரிந்துள்ளது. கி.பி 1841ஆம் ஆண்டு வரை முதல் கலங்கரை விளக்கு செயல்பட்டுள்ளது.
கி.பி 1762ல் கருப்பர் நகரம் முற்றிலும் தீயினால் பதிக்கப்பட்டு விட்டது. அப்பகுதியை மீட்டுருவாக்கம் செய்யும் பணியியுடன் கும்பினி, இன்றைய கோட்டைக்கும் பேரிஸ் கார்னருக்கும் இடைப்பட்ட எஸ்ப்ளனேட் பகுதியில் புதிய கலங்கரை விளக்கம் அமைக்க முற்பட்டது.
காரணம் - ஜார்ஜ் கோட்டைக்குள் இருக்கும் கலங்கரை விளக்கு, வியாபாரம் கையாளும் கருப்பர் நகரத்தில் இருந்து தெற்கில் தொலைதூரம் இருப்பதை உணர்ந்த கும்பினியார் மீண்டும் கி.பி 1834ல் அதிநவீன புதிய லைட் ஹவுஸுக்குத் திட்டம் போட்டு அனுமதிக்கும் முயன்றனராம். கி.பி 1838ல் முழுக்க முழுக்கக் கருங்கற்களால் ஆன லைட் ஹவுஸ் கட்ட முடிவானது. இன்று அதை உயர்நீதி மன்ற வளாகத்துள் மரங்களுக்கு இடையில் பார்த்திடுக.இதை வடிவமைத்தவர் மேஜர் ஸ்மித்.அக்காலத்தில் இதைக் கட்ட வெறும் ரூ.60,000 ஆயிற்றாம்! கி.பி 1840ல் பணி முடிந்ததாம்.பல்லாவரத்தில் உள்ள கல் க்வாரிகள் தகர்க்கப்பட்டு கருங்கற்கள் கடற்கரை சேர்ந்தனவாம்.
ஆனால் கி.பி 1844ல் தான் லைடவுஸ் செயலாற்ற ஆரம்பித்துள்ளது.கி.பி 1894 வரை, எண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்ட இது செயல்பட்டது. இடையில் பணியை முடிக்கப் போதிய நிதி இல்லையாம்!
ஆனால் காலம் போகப் போக இதன் உயரம் பற்றவில்லை என்று கும்பினி எண்ணி, மீண்டும் ஒரு புதிய லைட்ஹவுஸுக்குத் திட்டம் போட்டது.
அதே சமயம் கி.பி 1886ல் மாமல்லபுரத்தில் நவீன லைட்ஹவுஸ் கட்டப்பட்டது, உயர்நீது மன்றத்தின் மிக உயரமான கோபுரத்தின் உட்பகுதி லைட்ஹவுஸாக மாறியது.
கி.பி 1914, செம்டம்பர் 22 ரவு ஜெர்மனிக் கப்பல் எம்டன் மதராஸைத் தாக்கிய போது முதல் குண்டு விழுந்த இடம் லைட்ஹவுஸ் தான், அக்குண்டு இன்றும் கோட்டை ம்யூஸியத்தில் உள்ளது, நீதிமன்றத்தில் குண்டு விழுந்த இடம் குறிக்கப்பட்டுள்ளது.
அதன் பின் கி.பி 1976ல் மரீனாவில் இன்றைய லைட்ஹவுஸ் எழுப்பப் பட்டது.
தேங்காய் எண்ணெய்ப் பயன்பாட்டை அடுத்து கேஸ் லைட் பல்புகள், மெர்குரி நிரப்பிய பாத்திரங்கள் மூலம் லைட்ஹவுஸ் இயங்கியது.