ஹைக்கோர்ட் ஆஃப் மதராஸ்

கி.பி 26. 6. 1862 அன்று இங்கிலாந்தின் விக்டோரியா மஹாராணி அம்மையார் அனுமதித்ததன் பெயரில் இன்று மதராஸ் உயர்நீதி மன்றம் முறைப்படி ஆரம்பம் ஆனது.

மதராஸின் அழகிய, பெரிய வளாகங்களுள் ஒன்று இன்று ப்ராட்வேயில் இருக்கும் மதராஸ் உயர்நீதி மன்ரம்.

அதனுள் தான் பாரம்பரியம் மிக்க சட்டக் கல்லூரி இயங்குகிறது.

துறைமுகத்துக்கு எதிராக அமையும் இவ்வாளகத்தினுள் தான் இரண்டாம் கலங்கரை விளக்கு நிமிர்ந்து நிற்கின்றது.

பசுவின் கன்றைக் கொன்ற தன் மகனையே தண்டித்த மனுநீதிச் சோழனின் அழகிய கற்சிற்பம், அக்காட்சியைக் கண்முன்னே கொண்டு வருவதாக அமைந்துள்ளது நீதிமன்றத்தின் சிறப்பு.

பாரத தேசத்திலேயே மதராஸ் உயர்நீதி மன்றம் தான் கிளையுடன் இயங்குகிறது.அதுவே மதுரைக் கிளை.

தலைமை நீதிபதியின் கீழ் 59 நீதிபதிகள் கொண்டு இயங்கும் நீதிமன்றம் இதுவே!

கி.பி 1862 - 1892 வரை கடற்கரை ரயில்நிலையம் அருகில் உள்ள பெரிய கட்டிடத்தில் தான் நீதிமன்றம் இயங்கியது.அதன்பின் பணிகள் முடிய, 12.7.1892 அன்று சாவியை ஜஸ்டிஸ் சர் ஆர்த்தர் காலின்ஸ் இடம் மதராஸ் கவர்னர் ஒப்படைத்தார்.

J.W. ப்ராஸிங்டன் உயர்நீதி மன்றக் கட்டிடங்களை வடிவமைத்துள்ளார். புகழ் பெற்ற பொறியாளர்களான ஹென்ரி இர்வின் மற்றும் J.H.ஸ்டீஃபன்ஸ் கட்டி முடித்தனர்.இந்தோ சாராசனிக் கட்டிட அமைப்பில் மிக அழகான கட்டிடங்கள் வளாகத்தில் உள்ளன.

22.9.1914 அன்று ஜெர்மானியக் கப்பல் எம்டன் வீசிய குண்டு பட்டுச் சிதைந்த இடம் இன்றும் கல்வெட்டால் குறிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கண்டத்திலேயே ஒரே வளாகத்துள் பல நீதிமன்றங்கள் இயங்குவது மதராஸில் தானாம்!