மதராஸின் முதல் வழக்கும் தூக்குத் தண்டனையும்

கி.பி 1641
ஜார்ஜ் கோட்டையின் வாசலில் ஒரே பரபரப்பு!
ஆங்கில வீரர்கள் முகத்தில் பயம்...
கூவம் ஆற்றின் ஓரத்தில் ஒரு இந்தியப் பெண்ணின் உடல் மிதப்பதாகச் செய்தி வந்தவுடன் இந்த பயமும் வந்துவிட்டது...
***
கருப்பர் நகரம் [அதான் இன்றைய ஜார்ஜ் டெளன், அன்றைய சென்னைப்பட்டிணம்]

அதில் வாழ்ந்த ஒரு ஒழுக்கமற்ற பெண்ணின் சடலம் அது.
அவள் உடலில் காயங்கள் இல்லை, ஆனால் கொல்லப்பட்டு வீசப்பட்டாளோ என்ற ஐயம்!

கூவம் கரையில் உடலைப் பரிசோதித்த அதிகாரிகள் சிலர் அக்கூட்டத்தில் வேடிக்கை பார்த்த ஒரு இளைஞனை சந்தேஹத்தின் பேரில் கைது செய்தனர்.காரணம் அவன் உடலில், சட்டை வேட்டியில் ரத்தக்கரை.

நையப்புடைத்து விசாரித்ததில் அவன் இவளைக் கொன்றது தெரிய வந்தது.அவன் வீட்டில் இவளது உடைகள் மற்றும் சில பித்தளை ஆபரணங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டது.

இதைக் குறித்து ஆண்ட்ரூ கோகன் பூந்தமல்லி நாயக்க ராஜாவுக்குத் தகவல் தெரிவிக்க, அவரோ பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் உச்சகட்ட சோம்பலில்

”நீங்கள் உங்கள் தேசத்துச் சட்டப்படி விசாரித்து தண்டியுங்கள், இல்லையேல் என் கர்நாடகச் சட்ட ரீதியில் விசாரணை செய்யலாம்” என்று ஓலை எழுத, அதையே கருத்தில் கொண்டு அவ்விளைஞன் தூக்கில் இடப்பட்டான்.

ஜார்ஜ் கோட்டையில் ஆங்கிலேயர், பாரத தேசத்தில் கொடுத்த முதல் தூக்குத் தண்டனை இதுவே!

இதைக் குறித்து ஒழுக்கசீலன்களாக அவர்கள் லண்டனில் உள்ள கும்பினியின் தலைமைச் செயலகத்துக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.போதா குறைக்கு சாந்தோமில் உள்ள போர்த்துகீஸியரைக் குறை கூறுகிறார்கள், to justify the punishment given to an Indian for very first time.

” சாந்தோமில் பல குற்றங்கள் நிகழ்வதைக் காண்கிறோம், ஆனால் அவ்வரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை” என்று கோகன் எழுதியுள்ளார்.