ஸ்பென்ஸர் ப்ளாஸா - தேசத்தின் முதல் ஷாப்பிங் மால்

இன்று ஊருக்கு ஒரு மால் ஷாப்பிங் சென்டர் உருவாகி வருகிறது.

தெற்கு ஆசிய தேசங்களின் பழமையான மற்றும் பெரியதொரு மால் தான் இன்று மதராஸின் மவுண்ட் ரோட்டில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நிற்கும் ஸ்பென்ஸர் ப்ளாஸா.

பாரத தேசத்தின் முதல் மேற்கத்திய ஷாப்பிங் வளாகம் இதுவே!

கி.பி 1863-64 ஆம் ஆண்டுக் காலத்தில் ஆங்கிலேயரின் மேற்கத்திய வாணிபம், பொருள்களின் தேவைக்கு வேண்டி மதராஸில் ஸ்பென்ஸர் ஆரம்பம் ஆனது.

அக்காலத்துக் கட்டிடம் மிக அழகானது, கி.பி 1983ல் தீக்குப் பலியாகி இன்றுள்ள நவீன மால் வடிவத்தில் இன்று ஷாப்பிங், பொழுது போக்கு, காதலர்களின் சந்திக்கும் இடமாக இருக்கிறது.

ஸ்பென்ஸர் அன்ட் கோ என்ற ஆங்கிலேயத் தனி வணிகரின் முயற்சியால் இது உருவானது.அக்காலத்து ஆங்கிலேய அதிகாரிகளும், மதராஸின் செல்வந்தர்களும் வரும் இடம் இது.

ஆரம்பித்த ஆண்டிலேயே என்பது கடைகள் இருந்துள்ளன.

இந்தோ - சாராசானிக் கட்டிட அமைப்பில் அன்று அழகுற மால் எழும்பியது. W.N.போக்ஸன் என்ற ஆங்கிலேயர் மாலை வடிவமைத்தார்.

எனக்குத் தெரிந்த அனுபவத்தில் லேன்ட் மார்க் கடையில் தரமான நூல்கள், விளையாட்டுப் பொருட்கள் வாங்கியுள்ளேன்.

பாரம்பரியமாக இம்மண்ணில் செட்டில் ஆகிவிட்ட கேஷ்மீரிகள், ஈரான் தேசத்தும் இஸ்லாமிய வியாபாரிகள் மூலம் அழகியக் கைவினைப் பொருட்கள், சில கற்கள் - gems வாங்கியுள்ளேன்.மிக்க நியாயமான மரியாதை மிக்க கடைகள் உண்டு.

அக்காலத்தில் நம்மூரில் கிடைக்காத பல மேலை தேசத்துப் பொருட்கள்-குறிப்பாக உணவுப் பண்டங்கள் இறக்குமதியாகி இங்கு விற்கப்பட்டன.

பல ஊர்களிலும் மால்கள் வரலாம், ஆனால் மதராஸின் ஸ்பென்ஸர் போல் வருமா?