அடையாறு
மதராஸின் மற்றொரு ஆறு அடையாறு.
மதராஸின் ஜீவநதி இதுவும் ஆகும் - ஒரு காலத்தில்....
ஆங்கிலேயர் இதையே தம் தெற்கு அரண் என நம்பினர்.
கடலைச் சென்று அடைவதால் ”அடை ஆறு” [வினைத்தொகை] எனலாம்.
தன் கரையில் வாழும் மக்களை அடைகாத்து உய்விப்பதால் ”அடை ஆறு” ஆனது.
நமக்குப் பயன்படாவிட்டாலும் இன்றும் பல பறவைகளுக்கு உறைவிடம் இதன் முகத்வாரம்.
நம் அலட்சியப் போக்கால் சென்னையை வீணாக்கிய செம்பரம் பாக்கம் ஏரிக்கு அருகில் தோன்றும் இவ்வாறு சுமார் 42.5 கிலோமீட்டர் பாய்கிறது, மதராஸில் கடலுடன் கைகோர்க்கிறது.இன்று இதன் கரையில் தான் புற்றுநோய் மருத்துவமனை, மலர் மருத்துவமனை, தியோஸோஃபிகல் சொஸைட்டி, எம்.ஜி.அர் ஜானகி மகளிர் கல்லூரி, இசைக்கல்லூரி,ஆந்திர மகிள சபா மருத்துவக்கூடம், அடையாறு படகு சவாரிப் பயிற்சி க்ளப் [ஏதோ தினமும் காலை பணக்காரர் சிலர் படகில் பயிற்சி செய்து பொழுது போக்குவதைக் காணலாம்] ஆகியன கொலு இருக்கின்றன.
உலக ப்ரஸித்தி பெற்ற அடையாறு ஆலமரத்தின் வேருக்கு நீரளிப்பதும் இவ்வாறே!
உலகில் மிக உயர்ந்த, சிறந்த குழந்தைக் கல்விக் கோட்பாட்டை உருவாக்கிய Dr.மரியா மாண்டிசொரி அம்மையார் கி.பி 1936 முதல் ஒன்பது ஆண்டுகள் ஆல்காட் கட்டிடத்தில் தங்கி ஆசிரியப் பயிற்சியும், பள்ளியும் நடத்தினார்.
கூவத்தைப் போலவே நாம் சீரழித்துக் கொண்டு இருக்கும் ஆறு அடையாறு.இயற்கையும் அதன் சுத்தீகரிப்பைச் செய்த வண்ணம் இருக்கிறது.
மஹாகவி பாரதி மிகவும் ரசித்து, உல்லாசமாகக் காற்று வாங்க விரும்பிய இடம் இதன் கரை என்று அவரே ஓரிடத்தில் குறிப்பிடுவார்.
குதிரை வண்டில் ஏறிக் கொண்டு அடையாற்றின் கரையில் படுத்த வண்ணம் நாவல்கள் படிக்க வேண்டும் என்ற கருத்தை அவர் வெளியிடுகிறார்.
அடையாற்றங்கரைப் போர்
24.10.1746ஆம் நாள் பாண்டிச்சேரி ஃப்ரெஞ்ச் படை சாந்தோம் மூலம் நுழைந்து சற்றும் எதிர்பாரா விதமாக ஆங்கிலேயரின் ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்ற முற்றுகையிட்டது.பாவம்! அதே வேளை ஆற்காடு நவாபின் படைகளும் கோட்டையை முற்றுகையிட வர, அல்லாடிப் போயினர் ஆங்கிலேயர்.
மஹ்ஃபஸ் கான் என்ற ராணுவத் தளபதியையும் அவன் படையையும் தெற்கு நோக்கிச் செல்லுமாறு ஃப்ரெஞ்ச் எதிர்ப்புடன் வலியுறுத்த அவர்கள் அடையாற்றின் கரையில் வந்து முகாம் இட்டுக் கொண்டான். சுமார் பத்தாயிரம் வீரர்களுடன் அடையாற்றின் வடகரையில் தங்கிய நவாப் படை, மேலும் பாண்டிச்சேரியில் இருந்து சாந்தோமுக்குள் ஃப்ரெஞ்ச் படை வருவதைக் கண்காணித்தான்.காரணம் சாந்தோமை நவாப் கைக்கொண்டான்.இந்நிகழ்ச்சி 22.10.1746 அன்று நிகழ்ந்துள்ளது.
ஆனால் பாண்டிச்சேரிப் படை பயங்கரமான தாக்குதலை நவாப்பின் மீது செலுத்த, அவர்தம் ஆயுத பலத்தால் திக்குமுக்காடிப் போன நவாப் படை 24.10.1746மாலை சரண் அடைந்து ஓடிவிட்டது, ஆங்கிலக் கோட்டை ஃப்ரெஞ்ச் வசமானது.
ஒரு நாள் முழுவதும் பலர் அலறக் காண இப்போரை Battle of Adyar என்பர்.