தமிழகத்தின் முதல் பெண்கள் கல்லூரி - ராணி மேரிக் கல்லூரி
கல்வியில் சிறந்த தமிழ் தேசத்தில் முற்காலத்தில் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கினர்.
மதுரை மூன்றாம் தமிழ்ச்சங்கத்தில் 49 பெண் புலவர்கள் இருந்த சான்று போதுமானது!
***
ஆங்கிலக் கல்வி மூலம் பட்டம் பெற்று உயரும் முறை பெண்களுக்குக் கி.பி 1910ஆம் ஆண்டு அறிமுகம் ஆனது.அதற்கான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன.
மஹாகவி பாரதியார் இதற்கு ஒரு முக்கியமான உந்துதல் சக்தி என்பதை இக்காலத்துப் பெண்கள் மறக்கவே கூடாது.
இன்று நம்மூர்ப் பெண்கள் ஊர் விட்டு, தேசம் விட்டு வெளியேறி மிக உயர்ந்த வேலைகள் மூலம் பொருளீட்டும் கல்வியைக் கொடுக்கும் எண்ணம் 1910ஆம் ஆண்டில் விதைக்கப் பட்டதே!
கி.பி 1900ல் கர்னல் ஃப்ரான்ஸிஸ் கேப்பர் மரீனாவின் எதிர்ப்புறம் மிகப்பெரிய தோட்ட வீட்டைக் கட்டினார்.ஆனால் அவர் அதை விற்றுவிட, அவ்வீட்டில் கி.பி 1914ல் தமிழகத்தின் முதல் பெண்கள் கல்லூரி [ஆங்கில வழிக் கல்வி] ஆரம்பம் ஆனது.
அதுவே இன்று மரீனாவில் இருக்கும் ராணிமேரிக் கல்லூரி.
1914ல் இதன் பெயர் மதராஸ் பெண்கள் கல்லூரி.
பல ஆயிரம் மக்கள் வாழ்ந்த மதராஸில் வெறும் 37 பெண்கள் தான் சேர்ந்தனர்.
ஸ்ரீமதி டி லா ஹே என்ற ஐரோப்பிய பெண்மணியே முதல் முதல்வர்.
அவர் மூலம் அடுத்த அடுத்த ஆண்டுகளில் பல கட்டிடங்கள் உருவாகிக் கல்லூரி வளர்ந்தது.