ஆயிரம் விளக்கு மசூதி

மதராஸின் மிக முக்கியமான இடங்களுள் ஒன்று மவுண்ட் ரோட்டில் உள்ள 1000 LIGHTS MOSQUE - ஆயிரம் விளக்கு மசூதி.

இது ஒரு சட்டசபைத் தொகுதியும் கூட.

கி.பி 1785ல் ஆங்கிலேயரிடம் இருந்த இப்பகுதி முழுக்க அடர்ந்த மரங்கள் கொண்டதாக இருந்துள்ளது.

அதை வாலாஜா நவாப் அதீத விலைகொடுத்து வாங்கினார்.

அவ்விடத்தில் இருந்த தோட்ட மாளிகை ”மேயர் மெக்கேஸ் கார்டன்” எனப்பட்டது.

அதன் பெயரை நவாப் ”அஜிம் பாக்” என்று மாற்றித் தன் பேரன் அஜிமுக்கு வழங்கினார்.

அக்கட்டத்தில் தான் மதராஸின் இஸ்லாமியர் தம் தொழுகைக்கு நவாபின் மாளிகையை அடுத்து உள்ள இடம் ஒன்று தேவை என உணர்ந்து இன்றுள்ள ஆயிரம் விளக்கு மசூதித் தோட்டம் வாங்கப்பட்டது.

ஆனால் சில வரலாறுகள், புனித ஜார்ஜ் கோட்டை கட்ட, கடற்கரைவாழ் முஸ்லிம் மீனவர்தம் மதரஸா பள்ளி [அரபு மொழி, குரான் கற்றுக் கொடுக்கும் பள்ளிக்கூடம்] இடத்தை நாயக்க மன்னர் கொடுத்து, அதற்கு ஈடாக இப்பகுதியைத் தந்துள்ளார் என்றும் அறிகிறோம்.

கி.பி 1800ல் இப்பகுதியில் அழகிய இஸ்லாமியத் தொழுகை இடம் ஏற்பட்டுள்ளது. [1795 - 1801ஆம் ஆண்டுக்குள் ஷியா முஸ்லிம்களின் தொழும் இடமாக இது ஆனது]

ஆனால் இதனை அடுத்து எல்.ஐ.சி தாண்டி மிகத் தொன்மையான தர்க்கா ஒன்று மவுண்ட் ரோட்டின் இடது புறம் தினமும் பலர் வரும் ஸ்தலாக இருப்பதையும் அறிக.

அக்காலத்தில் பாரத தேசத்தில் அனைத்து சமய வழிபாட்டு ஸ்தலங்களிலும் விளக்கேற்றித் தான் வழிபட்டனர்.

மொஹரம் திருநாளில் நவாப் முன்னிலையில் 1008 விளக்குகள் இரவில் ஏற்றப்பட்டு வழிபாடு நிகழ்ந்தது. அதனால் இப்பகுதிக்கு ஆயிரம் விளக்கு மசூதி என்று பெயர்.

சில அரசு குடும்பத்து இஸ்லமையர் தம் கல்லறைகளும் இப்பகுதியில் உள்ளன.

மிக அழகிய கூம்பு வடிவங்கள் கொண்ட மசூதி தேசத்தின் இறையாண்மையை எடுத்துக் கூறுவதாக கம்பீரமாக இன்றும் மவுண்ட் ரோட்டில் நிமிர்ந்து காட்சி தருகிறது - missing 1000 lamps.