Kings of Presidency College --- மதராஸ் ப்ரெஸிடென்ஸிக் கல்லூரி...
கி.பி 1820ல் மதராஸின் தலைசிறந்த, மக்கள் பெரிதும் மதித்த ஸ்ரீமான் தாமஸ் மன்ரோ மதராஸின் கல்விப் பணிகளில் ஆங்கில அரசு அதீத கவனம் செலுத்த வேண்டும் என்ற ஆணித்தரமான கொள்கையை முன்வைத்தார்.அவருக்குப் பின் கி.பி 1840ல் தான் எல்ஃபின் ஸ்டோன் கவனராக வந்த போது கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கணிதப் பேராசிரியரை இந்தியாவுக்கு வரவழைத்தார்.அவர் பெயர் E.B . போவெல்.இவரை முதல்வராகக் கொண்டு கல்வி நிறுவனம் அமைக்க ஆங்கிலேயர் திட்டமிட்டனர்.அவரும் மும்பை வந்தார், ஆனால் பல காரணங்களால் அவரால் பயணத்தைத் தொடர இயலாமல் போனது.
இதனால் ஆங்கிலேயர் கூப்பர் என்ற பேராசிரியரை கொல்கத்தா ஹூக்லி கல்லூரியில் இருந்து மதராஸுக்கு அழைத்தனர், அவரும் மகிழ்ச்சியுடன் வந்தார்.
அவரது தலைமையில் எழும்பூர் பகுதியில் எடின்பர்க் ஹோம் என்ற வாடகை வீட்டில் ப்ரெஸிடென்ஸி பள்ளி 15.10.1840ல் தொடங்கப்பட்டது.மதிப்பு மிக்க மதராஸ் பல்கலைக்கழகத்து முன் தோன்றிய பெருமை ப்ரெஸிடென்ஸிக் கல்லூரிக்கு உண்டு.
சிறிது காலத்தில் மும்பையில் இருந்து E.B.போவெல் மதரஸுக்கு ஒருவழியாக வந்தார், அப்போது அவரைக் கொண்டு அப்பள்ளி மேல்நிலை வகுப்புகளுடன் விஸ்தாரம் ஆனது.ஆனால் 1841ல் ப்ராட்வேக்குப் பள்ளி மாற்றப்பட்டது.
படிப்படியாக அப்பள்ளி வளர்ந்து கல்லூரி ஆனது, அதன் பின் இன்று மரீனா கடற்கரையில் கி.பி 1870ஆம் ஆண்டில் புதிய அழகிய விஸ்தாரமான கட்டிடத்தில் குடிபுகுந்து இன்று வரை பல லட்ச மாணவ மணிகளை தேசத்துக்கு உருவாக்கி வருகிறது, பல உயர்ந்த ஆசான்கள் மூலம். உ.வே.சாமிநாத ஐயர், Dr.ராதாக்ருஷ்ணன் போன்றோர் இதில் பணியாற்றியுள்ளனர்.
மதராஸின் பல ப்ரம்மாண்டமான கட்டிடங்களைக் கட்டியவர் ராபர்ட் சிஸ் ஹோம். அவர் முதன்முதலில் இக்கலூரிக் கட்டிடத்தின் மாதிரை வரைப்படத்தை உருவாக்கிக் கொடுத்து அப்போட்டியில் முதல் பரிசு பெற்றார்.அப்போது அவர் பெற்ற பரிசுத் தொகை ரூ.3000. அப்பப்பா...கி.பி 1864ல் இப்போட்டி நடத்தப்பட்டு, கட்டிடம் ஆரம்பம் ஆயிற்று.
இக்கல்லூரியில் இடம் கிடைத்துப் படிப்பது என்பது ஒரு அந்தஸ்தாகவே இன்றும் மக்கள் கருதுகின்றனர்.