அடையாறு எலியட்ஸ் கடற்கரை

சென்னை மாநகரில் அடையாற்றில் உள்ள எலியட்ஸ் கடற்கரை மிகவும் புகழ் பெற்றது.தற்காலத்தில் அப்பகுதியில் தான் வேளாங்கண்ணி தேவாலயம், அஷ்டலக்ஷ்மி கோயில் மற்றும் அறுபடை வீடு முருகன் கோயில்கள் அமைந்துள்ளன. மேலும் அடிக்கடி பல கண்காட்சிகளும், ரோரல் ஸ்கேட்டிங் பயிற்சியும், களரிப் பயிற்சியும் இப்பகுதியில் ஏற்படுவதைக் காண்க.

கலாக்ஷேத்ரா, பெசன்ட் நகர், சாஸ்த்ரி நகர், ஆல்காட் பங்களா, தியோஸோஃபிகல் அமைப்பு ஆகியன அடையாறு கடல் ஓரம் அமைகின்றன.

ஹ்யூ எலியட்ஸ் - இவர் இந்தியாவின் கவனர் ஜென்ரல் லார்ட் மிண்ட்டோவின் தம்பி. இவர் மதராஸின் கவனராக இருந்தவர் [1812 - 1820 A.D].

இவர் இன்றைய அடையாறு கடற்கரையை ஒட்டிய பகுதியில் குடியிருந்தார்.அவரது மகன் எட்வேர்ட் எலியட்ஸ்.அவர் அடையாற்றுப் பகுதி மக்களுடன் வெகு இயல்பாகப் பழகினார், பல நன்மைகள் செய்தார்.ஆனால் பாவம் அவர் தன் 28வது வயதிலேயே இறந்தார்.

அடையாற்றுப் பகுதி வாழ் மக்கள் அவரது பெயரால் கடற்கரையை ”எலியட்ஸ் பீச்” என்றனர்.

கத்தீட்ரல் சாலை - கேப்பர் ஹவுஸ் கடற்கரையை இணைக்கும் சாலைக்கும் எட்வர்ட் எலியட்ஸ் சாலை என்ற பெயரை ஆங்கில அரசும் வைத்தது.

எலியட்ஸ் பீச்சில் உள்ள நினைவுச் சின்னம் - காஜ் ஷ்மித் மெமோரியல்

மணிரத்னத்தின் மெளன ராகம் படத்தில் மழைப் பாட்டில் நடிகை இந்த நினைவு மண்டபத்தில் ஆடுவார்.இன்று நம் ஊர் மக்கள் எவ்வளவு அசிங்கம் செய்ய முடியுமோ அவ்வளவும் செய்துள்ள அற்புதமான ஆங்கிலேயர் தம் நினைவுச் சின்னம் காஜ் ஷ்மித் மண்டபம்.

டிசம்பர் 30, 1930ல் அன்றைய மதராஸை மிகக் கொடுமையான புயல் மழை தாக்கியது.அப்போது துறைமுகத்துள் நுழைய இடமின்றி எலியட்ஸ் கடலில் நங்கூரம் இட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது ஒரு டேனிஷ் கப்பல்.

மாலுமி காஜ் ஷ்மித் கரையில் தன் குழுவுடன் தங்கியிருந்த போது தான் புயலால் மக்கள் அலைக்கழிக்கப் படுவதைக் கண்டார், பலரை அலைகள் கடலுள் இழுத்துச் செல்வதையும் கண்டார்.உடனே தன் குழுவுடன் இணைந்து பலரையும் காப்பாற்றிக் கரை சேர்த்தார்.ஆனால் அவர் கடலுக்குப் பலியானார்.

அவரது சேவையை நினைவு கூறிட ஆங்கில அரசும் மக்களும் எழுப்பிய மண்டபம் தான் இதுவாகும்.

___________________________________________________________