Sakthi Foundation

நான் சந்தோஷமாக வாழ வேண்டும்! - என்ன வழி?

 

மனிதனின் அன்றாடத் தேவைக்கு வேண்டிய எட்டு விஷயங்களையே அஷ்ட லக்ஷ்மிகளாக வேதம் உருவகம் செய்துள்ளது.

லக்ஷ்மி என்றால் ஸ்ரீ, திரு, அலைமகள், செல்வி என்று பல பெயர்கள் உள்ளன.

தூய்மை, கருணை, நேர்மை, ஒழுக்கம், உழைப்பு, நல்ல வார்த்தைகள், உண்மை, அழகு, இயற்கை, கட்டுக்கோப்பும் கட்டமைப்பும் கூடிய வேலைகள், மங்கலகரமான அனைத்து எண்ணங்கள் - பேச்சுக்கள் - செயல்கள்  ஆகியன லக்ஷ்மி எனப்படும்.

நாம் ஒவ்வொருவரும் செய்த நல்ல - தீய செயல்களைப் பொருத்தே அஷ்ட ஐஸ்வர்யங்களும் வாழ்க்கையில் கிடைக்கும்.எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பதே இல்லை. அஷ்ட ஐஸ்வர்யங்களை வாரி வழங்கும் சக்திக்கு ஜீவாதார சக்தி - SELF AWARENESS LIFE ENERGY என்று பெயர்.

அளவுக்கு அதிகமான ஆசை, கோபம், பொறாமை, கருமித் தனம், சதா குறை கூறுதல், ஆணவம், சோம்பல் ஆகிய ஆறு தீய சக்திகள் ஜீவாதார சக்தியைக் குறைத்து விடும்.

பூஜை, வ்ரதம், விழாக்கள், கோயில் வழிபாடு, புண்ணிய தீர்த்தங்கள், உதவிகள், தான தர்மங்கள், சுயநலம் அற்ற தனிமனித - சமூஹ சேவை, குடும்பத்தை நேர்மையான வழியில் பாதுகாத்தல் ஆகியன ஜீவாதார சக்தியை அதிகரிக்கும்.

நவராத்ரியில் தேவி மஹாலக்ஷ்மியின் அருளைப் பெற அன்னையை வணங்குவோம்.

சந்தான லக்ஷ்மி - குடும்பம், உறவுகள்

தைர்ய லக்ஷ்மி \ வீர லக்ஷ்மி - உடல் மற்றும் மன நலம்

தான்ய லக்ஷ்மி - போதுமான உணவு

வித்யா லக்ஷ்மி - கல்வி, தொழில்

தன லக்ஷ்மி - நேர்மையான உழைப்பால் மட்டுமே கிடைக்கும் சம்பாத்தியம்

விஜய லக்ஷ்மி - எடுத்த செயலைச் சரியான காலத்தில் சரியாக முடிக்கும் திறன்

கஜ லக்ஷ்மி - எங்கு சென்றாலும் எவ்விடத்திலும் நலமாக வாழ வழி கிடைத்தல்

ஆதி லக்ஷ்மி - மேற்கண்ட அனைத்து செல்வங்களும் கிடைக்க மனதில் தரமான நல்ல எண்ணங்கள் இருக்க வேண்டும். அதுவே ஆதி லக்ஷ்மி சக்தி!

அன்னை மஹாலக்ஷ்மி சதா பெருமாளின் வலமார்பில் வாழ்கிறாள்.

நேர்மையான கடின உழைப்பால் பணம் சம்பாதிப்போம்.

அதன் மூலம் குடும்பத்தையும் உறவுகளையும் காப்போம்.

அதில் ஒரு பகுதியை சமுதாயத்துக்கு அளிப்போம்.

இறையருள் பெற்று சந்தோஷமாக வாழ்வோம்.

இதையே அறம் - பொருள் - இன்பம் - வீடு என்று பாரத தேச வாழ்க்கை முறை கூறுகிறது.