Sakthi Foundation

மயிலைக் கடற்கரையில் தாமஸின் ஜீவசமாதி...

சென்னையில் உள்ள சாந்தோம் தேவாலம் மிகவும் ப்ரஸிதி ஆனது.

சேர தேசம் வந்த ஏசுவின் மாணவர் தாமஸ் மயிலையில் வாழ்ந்தார்.

அப்போது அவர் இன்றுள்ள சாந்தோம் பகுதியில் தான் வாழ்ந்தார்.

காரணம் அக்கடற்கரைப் பகுதியில் மயிலைக் கபாலீச்சரமும் ஒரு சமணப் பள்ளியும் இருந்துள்ளன.

நாம் முன் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளில் இன்றுள்ள கிறிஸ்துவம் மிகவும் பிற்காலத்தே ஐரோப்பியரால் மாற்றியமைக்கப்பட்டதை என்பதை நினைவில் கொள்க.

மேலும் தாமஸ் பல தேசத்தும் வணிகர்கள் கப்பல்களில் வரும் மயிலைத் துறைமுகத்தில் வாழ்ந்ததும் ஆச்சர்யம் இல்லையே?

அதே வேளையில் மயிலை திருவள்ளுவர் அல்லது அவர்தம் மாணாக்கரின் தொடர்பும் தாமஸுக்கு உண்டாகி இருக்கக் கூடும்.

தாமஸ் மயிலை - சைதைச் சின்னமலை - பரங்கி மலை ஆகிய இடங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்.

கற்றோர் வாழும் காஞ்சிக்கும் அவர் சென்று வந்திருக்க வாய்ப்புகள் மிக அதிகம்.

தர்மம் மிகு சென்னையில் பட்டிணத்தார், சீதக்காதி, பாம்பன் ஸ்வாமிகள், பாடச்சேரி மகான் போன்ற பல ஞானிகளின் ஜீவ சமாதிகள் உள.

அதே போல் தான் மக்களின் மனப்பிணி-உடற்பிணி தீர்த்த தாமஸ் ஒரு சித்தராகவே மதிக்கப்பட்டார்.அவரது இறப்புக்குப் பின் அவரது கல்லறை ஜீவசமாதி ஆனது.

அவரது சமாதி மண் சென்னை மக்களால் அருமருந்தெனப் பயன்படுத்தப் பட்டது.சில ஐரோப்பிய வணிகர்களும் அவரது கல்லறை மண்ணை எடுத்துச் சென்றுளர்.

அவரது காலத்திலேயே பல்லவக் கோயில் கலை வடிவில் த்யாகச் சிலுவைக் குறியுடன் வழிபாட்டு இடம் கடற்கரையிலும் பரங்கிமலையிலும் அமைத்தார்.

பல்லவ அரசின் அரச சின்னங்களான சிங்கங்கள் கொண்ட தூண்கள், தோரண வாயிலுடன் கூடிய கர்ப்பக்ருஹம், தீர்த்தத் தொட்டி ஆகியவற்றுடன் கூடிய புனித சிலுவை அகழ்வாய்வில் கண்டு பிடிக்கப் பட்டு இன்று அவை சாந்தோம் சர்ச் அருங்காட்சி அகத்தில் உள.

சமய வேற்றுமை பாராமல் அவரது சிலுவையையும் அவரது ஜீவசமாதியையும் மக்கள் வணங்கினர் என்பது வரலாற்று ஆய்வுகளில் காணப்படுகிறது.

குறிப்பாக இஸ்லாமியர்கள் அவரது சமாதியை விளக்கேற்றியும் தூபமிட்டும் ஆராதித்துள்ளனர்.காரணம் இஸ்லாம்-கிறிஸ்துவம்-யூதம் ஆகியன ஒரே விதையின் பல்வேறு வளர்ச்சிகள் தாம்.

இன்று நாம் காணும் சமயங்கள் பற்பல கடந்த 500 ஆண்டுகளில் மாற்றப் பட்டன.

ஆனால் போர்த்துகீஸியர் இஸ்லாமிய அன்பர் ஒருவர் தாமஸின் சமாதியில் பூஜிப்பதை ஏற்கவில்லை.

15ஆம் நூற்றாண்டில் பிற்பகுதியில் இவர்கள் தம் ஊர்ப்பாணியைக் காட்டினர்.

பாரதப் பண்பாட்டின் அடிப்படையில் அதுவரை இருந்த ஏசு ஐரோப்பிய ஏசு ஆனார், கோயில் அமைப்பு சர்ச் ஆனது, பல விஷயங்கள் மாறின.

ஆங்கிலேயர் ஜார்ஜ் கோட்டையைக் கட்டிக் கொண்டு மதராஸப் பட்டிணத்தை உருவாக்கிய காலத்தில் நவீன கிறிஸ்துவ மதத்தின் உட்பிரிவினர்தம் சண்டைகள் பதிவாகி உள்ளன.

ஆனால் சத்தியம் மாறாது!

ஏசுவின் மாணவர் தாமஸ் பாரத தேசத்தில் தன் ஆசான் அறிந்த ஆன்மீக நெறிகளை ஆழங்கால் பட்டுக் கற்றுணர்ந்தார், பரப்பினார், ஏசு மீதான மரியாதையை மக்களுக்கு உண்டாக்கினார் - மதம் மாற்றம் செய்யவில்லை! காரணம் ஏசு மதவாதி அல்ல!

அவரது போதனைகளை அக்கால பாரத - தென்னக மக்களும் அரசும் ஏற்றுக் கொண்டு உள்ளன.

பாரத தேசத்தின் மஹான்களில் ஒருவராகத் தாமஸ் மதிக்கப் படுகிறார்.

பல ஆய்வுகள் தாமஸின் விவிலியக் குறிப்புகள் அதிகம் பாரத தேசத்தின் ஆன்மீக நெறிகளை ப்ரதிபலிப்பதாகக் கூறுகின்றன.

காரணம் - ஏசுவும் பாரதத்தின் ஆன்மீக நெறிகளைத் தானே கற்றார்?

கட்டுரை வளரும்........

Dr.M.Madeswaran

Madras - 26.1.2016