தொல்காப்பியமும் உயிர்களின் பரிணாமமும்...
மிகுந்த கவனத்துடன் ஆசிரியர்கள் இதைப் படித்து உள்ளுணர்ந்தால் மட்டுமே மாணாக்கருக்கு அறிமுகம் செய்ய முடியும்.
நம் முன்னோர்கள் உயிரினங்களை எவ்வாறு பகுத்துப் பார்த்தனர் என்று தொல்காப்பிய இலக்கணம் நூல் மூலம் அறிகிறோம்.
இதை ஆறிவியலில் உயிரினங்களின் தோற்றம், பகுப்பு - classifications ஆகிய பாடங்களை அடுத்து இதைச் சொல்ல வேண்டும்.
இவற்றை ஐம்பூதங்களின் BMIAC உடன் இணைத்துக் காண்பதே மிக முக்கியம்.
இவற்றுள் அனைத்து உயிர்களும் விழிப்புணர்வு தன்மை கொண்டவை.
ஆனால் அவ்விழிப்புணர்வின் தன்மை மாறுபடுவதைக் கருத்தில் கொண்டே பகுப்பு மேற்கொள்ளப்பட்டதை அறிக.
அந்த விழிப்புண்ரவின் அடிப்படையில் தான் நீர் வாழ்வன முதல் மனிதன் வரை பரிணாமம் நிகழ்ந்தன.
மேலும் மனிதன் ஒன்று - ஆறு அறிவு உயிர்களுள் தன் தன்மை, குணம், பேச்சு, செயல் ஆகியவற்றால் என்று இருக்கிறான்.
உயிரினங்களின் அறிவை வைத்தே நம் தமிழர் உயிரினங்களைப் பகுத்தனர்.
ஓரறிவு உயிர்கள் - உடல் மட்டுமே கொண்டு அறியப்படும். [உடல் பற்றிய சதா எண்ணத்துடன் அதன் தேவைகளுக்கு மட்டும் முக்யத்துவம் தரும் மனிதன்]
இரண்டறிவு உயிர்கள் - உடலும் வாயும் கொண்டவை [உடலும், உணவுச் சுவைக்கும் பேச்சுக்கும்]
மூன்று அறிவு உயிர்கள் - உடல், வாய், மூக்கு கொண்டவை [உடல் சுகம், உணவு - பேச்சு, பல்வேறு ஆசைகள்]
நான்கறிவு உயிர்கள் - உடல், வாய், மூக்கு, கண்கள் கொண்டவை [உடல், உணவு - பேச்சு, வாசனைகள், பார்வையால் சுகித்து இன்பம் கொள்வது]
ஐந்தறிவு உயிர்கள் - உடல், வாய், மூக்கு, கண்கள், காதுகள் கொண்டவை [உடல், உணவு - பேச்சு, வாசனைகள், பார்வையால் சுகித்து இன்பம் கொள்வது, செவிப்புலன் சுகானுபவம் கொள்வது]
ஆறாம் அறிவு கொண்ட உயிர்கள் - உடல், வாய், மூக்கு, கண்கள், காதுகள், மனம் ஆகியன கொண்டன. [அனைத்துடனும் மனதின் போக்குக்கு அதீத இடம் தருதல்]
ஆனால் இவற்றைக் கொண்டு மனிதனைத் தரம்தாழ்த்துவது இல்லை.
ஆனால் மனிதனின் குணமும் வாக்கும் செயலும் தரம் தாழ்வது கண்டால் அவர்கள் கீழ்நிலை கதி கொண்டவராவார்.
பரிணாம வளர்ச்சியில் உயிரினங்கள் அனைத்தும் சதா இயற்கைக்கு உபகாரமாய், மற்ற ஜீவன்களுக்கு உபகாராமாய் இருக்கும் நிலையில் உயர்ந்தவையே, மனிதனுக்கும் அதே கதி.
உடல் - நிலம்
வாய் - சுவை ஆனது, நீரினால் விளையும் உணவுப் பொருளின் சுவையின்பம் காண்பதே, இது நீர் தத்துவம்.
மூக்கு - வாசனை - வாயு
கண்கள் - பார்வையால் தெள்ளிவது , வெளிச்சம், தீ தத்துவம்
காதுகள் - விழிப்புணர்வின் கேள்வி அறிவைக் கொள்வதால் ஆகாசம்
மனம் அறிவைக் கொண்டு மேலும் பரிணமித்து விழிப்புணர்வாகி அகண்ட ஆகாச தத்துவமாகி, தூய அன்பால், பக்தியால், சேவையுமாகி மனிதனை உயர்த்தும் கருவி என்பது முன்னோர் வாக்கு.
அதன் படியே பல உயிர்களும் அன்பால் சதா உபகாரமாய் இருப்பதைக் காண்க.
தொல்காப்பியர் வகுத்த பண்டைத் தமிழ் உயிரினப் பரிணாமம் வெறும் உடல் சார்ந்த அறிவியல் அல்ல, அது வாழ்வியல் நிலையுடன் இணைந்த கதியாகும் என்பதை உணர்த்துக.
குமரிக்கண்டத்தில் அரங்கேறிய தொல்காப்பிய ஆசான் தொல்காப்பியரின் அருளால், குமரி அம்மையின் அருளால் அணுவளவேனும் புரிதல் ஆகி எழுதப்பட்டது.