தொல்காப்பியம் காட்டும் தாவரவியல் குறிப்புகள்
வெளிப்புறத்தில் உறுதியாயும், உட்புறத்தே மென்மையுமாய் உள்ளது புல்.தென்னை, பனை, பாக்கு, மூங்கில் ஆகியன புல் வகையே.
தோடு - கிளையுடன் நெருங்கி அதை மூடிய நிலையில் உள்ள இலை
மடல் - பரந்த இலை - வாழை, தாழை மடல்
ஓலை - தென்னை, பனையின் இலைகள்
ஏடு - தென்னை, பனையின் ஓலைகள் காய்ந்தால் ஏடு
இதழ் - பூவின் இதழ்
பாளை - பூக்களுடன் மூடிய உறுதியான பட்டை - தென்னம் பாளை
ஈர்க்கு - ஈர்க்குமார் என்பதே விலக்குமாரின் சீமாரின் பெயர் - கொங்கு தேச்ததில் ஈக்குமார் என்பது வழக்கு
குலை - கனிகள் தொகுத்துக் கூட்டமாய் ஒரு சேரக் காய்த்து விளங்குவது - ஆகியன புல் வகைத் தாவரத்தின் உறுப்புகள்
தண்டினுள் மிக உறுதியான உடல் அமைப்பு கொண்ட தாவரமே மரமாகும்.
இலை
முறி - முள்
தளிர்
தோடு
சினை - இன்றைய கிளை
குழை
அரும்பு - மொட்டு
பூ
நனை ஆகியன மரத்தின் உறுப்புகள்
காய், பழம், தோல், செதிள், வீழ்