அன்பான இக்காலத் தமிழரே
குறிப்பாக அரசியல் பேசும் தமிழரே
அதிலும் குறிப்பாக திராவிடம் பேசுவோரே
வணக்கம்
மொழியையும் மதத்தையும் சாதியையும் முடிச்சுப் போடாதீர்
அதே போல் தமிழ் என்றால் உங்களுக்கு மட்டும் சொந்தம் அல்ல
அது எட்டு கோடி ஜனங்களில் ஊடக மொழி சக்தி
மொழிப்பற்று என்று கூறிச் சீறி சாதி வேற்றுமையை வளர்க்காதீர்
மத வெறியைத் தூண்டாதீர்
ஆங்கிலத்தின் ஆளுமையைத் தடுக்கப் போராடுவீர்
ஊடகங்கள் மூலம் மொழி சிதைவதைக் காண்க
தேவையில்லாமல் பிறரது உரிமைகளை கேலி செய்வது - கண்டிக்க வேண்டிய ஒன்று
மதம் தேவை இல்லை எனில்
எல்லா மதங்களையும் தைரியமாக எதிர்த்திடுக
நாஸ்திக வாதத்தை எல்லா மத மக்களிடமும் பேசுக
பெண் சுதந்திரத்தின் போக்கை எல்லாருக்கும் கூறுக
சபரி மலைக்குப் போராடும் கூட்டமே
சில மதங்களின் சராசரி வழிபாட்டு ஸ்தலங்குள்ளேயே பெண்கள் நுழைய முடியவில்லை
அவர்களுக்கும் சேர்ந்து வழக்குப் போடுக
ஊடக சக்தியால் யார் எதை வேண்டுமானாலும் பேசலாம், காட்டலாம் என்று சுதந்திரம் இருக்க அதைத் தவறாகக் கைக்கொண்டு பாரதத்தில் வேற்றுமை விதைக்க வேண்டாம்.