குமரிக் கண்டம் குறித்த ஆராய்ச்சிகள்

1846 ஆண்டில் புகழ் பெற்ற விலங்கியல் துறை வல்லுனர் ஃபிலிப் ஸ்லாட்டர் மடகாஸ்கர் பகுதியில் வாழும் பாலூட்டி விலங்குகள் பற்றி ஆராயும் போது, ஒரு காலத்தில் இந்தியாவும் மடகாஸ்கரும் நிலப்பகுதியாய் இணைந்து இருந்தன என்ற ஆய்வுக் கருத்தை வெளியிட்டார்.

”மிகத் தொன்மையான நிலம் தீவுகளாய்ச் சிதறின.அவற்றிற்கு நான் ”லெமூரியா” என்று பெயர் வைக்கிறேன்” - ஃபிலிப்

பயிர்கள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றில் இந்தியா - மடகாஸ்கர் நிலப்பகுதிகளுக்கு உள்ள ஒற்றுமைகள் ஆராயப்பட்டன.

இந்த நிலப்பகுதியில் தான் மனிதன் பரிணமித்தான் என்ற ஆய்வுகள் கூறின. இதை எர்னிஸ்ட் ஹேக்கல் உறுதி செய்து எழுதினார்.

இதே கருத்தை மேலை தேசத்து விஞ்ஞானிகள் பலரும் கூறினர்.

இந்த நிலப்பரப்பில் வாழ்ந்த ஆதிமனிதர்களே த்ராவிடர்கள்.அவர்கள் பூமி முழுவதும் புலம் பெயர ஆரம்பித்தனர்.

மிக முக்கியமான கடல்கோள்கள் மூலம் ஒவ்வொரு காலத்திலும் லெமூரியாக் கண்டம் அழிவுற்றது.

மேற்கூறிய மேலை தேசத்து ஆய்வுகள் வரும் முன் பல நூற்றாண்டுகட்கு முன்பே பாரத தேசத்தின் சமஸ்க்ருத தமிழ் இலக்கியங்கள், ஆன்மீக நூல்கள் அழிந்து போன நிலப்பரப்பைப் பற்றிய சில முக்கிய தகவல்களைக் கூறுகின்றன.

இந்த லெமூரியாக் கண்டம் தான் தமிழரின் குமரிக்கண்டம்.

இது பாண்டியர்தம் பூமி.

குமரி நிலம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டது.

குப்சா - இதன் தெற்கில் குமரி ஆறு, வடக்கில் பஃறுளி ஆறு ஓடின.

தென் கிழக்கில் குமரிக் கடல்.அதன் அலைகள் அடிக்கும் வண்ணம் குமரி மலை இருக்க.அங்கே கபாடபுரம் அமைகிறது.

கபாடபுரத்தில் பாதுகாப்புக்கான போர்க் கருவிகள் உள்ளன, வனீகம் செய்ய ஏற்ற துறைமுகம் அமைகிறது.

அகழியால் சூழப் பட்ட கோட்டையினுள் பாண்டியர் தம் தலைநகரம் அமைகிறது.

பாண்டியர்கள் பகவதி தேவியைக் குல தெய்வமாகக் கொள்வர்.அதனால் தம் தேசத்தையும் குமரி என்றே கூறினர்.

குமரி மலைக்கு த்ராவிட மலை என்றும் பெயர் உண்டு.

த்ராவிடம் என்றால் மிகப் பழந்தமிழில் எட்டு.எட்டு அஷ்ட ஐஸ்வர்களை அதன் சக்தியான திருமகளைக் குறிக்கும்.

மலையின் மீதும் அடிவாரத்திலும் கோட்டைகள் மூன்று இருந்தன.

கேதா - இப்பகுதியின் ஸ்கந்தன் கோயில் அமைந்துள்ளது.

குப்சாப் பகுதியின் மேற்கில் கார்வதப் பகுதி உள்ளது.

அதன் மேற்கில் கடலும் அகஸ்திய முனியின் மலேயா மலையும் உள்ளது.

கார்வதப் பகுதியில் திருமால் கோயில் அமைகிறது.

வடபாகம் பட்டிணம் ஆகும்.

இதையே நம் தமிழ் நூல்கள் கூறுவதைக் காணலாம்....

பாண்டியன் நெடியோன் ஆளும் குமரி நாட்டில் பஃறுளி ஆறு பாய்கிறது  - புறநானூறு ஒன்பதாம் பாடல்.

கலித்தொகை நூல் குமரி நாடு கடல்கோளால் அழிந்ததைக் கூறும்.

புறநானூற்றில் பெண்பால் புலவர் வடக்கில் வேங்கட மாமலையும் தெற்கில் குமரியும் தமிழகத்தின் எல்லைகள் என்பார்.

கி.பி இரண்டாம் நூற்றாண்டின் சிலப்பதிகாரம் குமரி தேசம் கடல்கோளால் அழிந்ததைக் கூறுகிறது.

செயற்கைக் கோள் காட்டும் புகைப்படம் மூலம் அறிவது...

கன்யாகுமரிக்குக் கீழ் மிக உயர்ந்த மலைகள் தொடர் சங்கிலியாய் உள்ளன.அவை மடிப்புத் தொடர்களாய் அண்டார்டிகா வரை உள்ளன.

இடோபோ என்ற செயற்கைக் கோள் மூலம் இவ்வாய்வுகள் வெளியாயின.

இம்மலைகள் கடல் பரப்பில் இருந்து நாலாயிரம் - ஐயாயிரம் மீட்டர் ஆழத்தில் உள்ளன.

இம்மலைகளில் மனிதன் வாழ இயலாது.ஆனால் இதை ஒட்டி கன்யாகுமரி, லட்சத்தீவுகள், மால்டிவீஸ்,இலங்கை ஆகிய பகுதிகளை இணைத்தாற் போல் சமவெளியும் கடலுள் உள்ளது.

அப்பகுதியில் ஆறுகள் ஓடுவதால் ஏற்படும் வண்டல் மண் படலம் படிந்துள்ளது.

பதினேழு ஆயிரம் ஆண்டுகட்கு முன் இன்றுள்ள நம் கடல் 130 அடி கீழே இருந்துள்ளது.

கன்யாகுமரிக்குக் கீழ் 25000 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள நிலம் உள்ளதை செயற்கைக் கோள் காட்டுகிறது.

லட்சத்தீவுகளையும் இலங்கையையும் அது இணைப்பதாக உள்ளது.

பாக் சலசந்தி அப்போது இல்லை.

இதுவே தொன்மை மிக்கக் குமரிக்கண்டம்.

சுமார் பத்தாயிரம் ஆண்டுகட்கு முன் ஏற்பட்ட கடல்கோள் முலம் பாக் சலசந்தி ஏற்பட்டு இலங்கை வேதாரண்யத்தில் இருந்து பிரிகிறது என்று ஆய்வுகள் காட்டின.