Onam - a live class room presentation
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Self Awareness
- Hits: 2673
Thiru Onam festival [above 6 years]
பக்த ப்ரஹலாதனின் பேரன் மஹாபலி.
அவனும் தாத்தாவைப் போலவே மிகுந்த நல்ல குணங்கள் கொண்டு வாழ்ந்தான்.இறைவன் மீது மிகவும் பக்தியுடன் இருந்தான்.
அவனது குரு அசுர குருவான சுக்ரன்.[நவக்ரஹங்களில் சுக்ரனின் குணத்தை மீண்டும் இவ்விடத்தில் recollect செய்து கொள்ள வேண்டும்]
திடீரென மஹாபலிக்கு ஒரு பேராசை ஏற்பட்டது.அது என்ன? நம் காலத்தில் வரலாற்றில் நெப்போலியனுக்கும் அலெக்ஸாண்டருக்கு ஏற்பட்ட அதே மண் ஆசை, பதவி மோகம் அவனுக்கு ஏற்பட்டது.
இந்த உலகும் முழுதும் தனது கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும் என்று ஆசைப் பட்டான்.குருவிடன் வழி கேட்டான். சில யாக யக்ஞ பூஜைகள் மூலம் SAL ENERGYயைக் கூட்டினால் உலகமே தன் வசப்படும் என்பதை அவரும் உணர்த்தினார்.
பேராசையின் பிடியில் சிக்கிய மஹாபலி முறைப்படி மிகப் பெரிய யாஹத்தைத் தொடங்கினான்.மிகவும் ஸ்ரத்தையுடன் யாஹம் நடந்தது. அதைக் காண வந்த பலருக்கும் கேட்ட பொருட்களை தானம் செய்து வந்தான் மஹாபலி.
யாஹம் பூர்த்தியாகி விட்டால் அவசியம் சங்கல்பம் செய்தது பலிக்கும்.இதை யாரும் தடுக்க முடியாது.இது இயற்கை நியதி.என்ன செய்வது? உலக மக்களும் பிற மன்னர்களும் பயந்தனர். அனைவரும் ஒரே மனதுடன் இறைவனை வேண்டினர்.
ஆவணி மாதம் திருவோண நாளில் ஸ்ரீமன்நாராயணன் அதிதி-கஷ்யபரின் மகனாக அவதாரம் செய்தார். பிறப்பிலேயே அவர் வாமனன் - குள்ளன்.ஆனால் மிக்க விழிப்புணர்வின் வடிவாக அவர் திகழ்ந்தார்.
மஹாபலியின் யாஹத்தைக் கேள்விப்பட்ட வாமன மூர்த்தி யாஹ சாலைக்குச் சென்றார்.
மஹாபலி மிக்க மரியாதையுடன் வரவேற்று விருந்தோம்பல் செய்தான்.ஆனால் சுக்ரனுக்கு வாமனனின் பிறவி ரகசியமும் அவரது வருகையின் பின்னணியும் அறிவில் புலப்பட்டுவிட்டது.தன் மாணவன் மஹாபலிக்கு அதை எடுத்து விளக்கினார்.கவனத்துடன் இருக்கும்படி கூறினார்.
தன்னை நாடி வந்தவர்கள் எவராயினும் அவரை மனம் புண்படுத்தக் கூடாது என்ற உயரிய கொள்கையை அவன் கடைப்பிடிப்பவன்.எனவே சுக்ரன் சொல் மீறி அமைதியாக இருந்தான்.
வாமனன் மஹாபலியிடம் தனக்கு மூன்று அடி மண் [நிலம்] வேண்டும் என்று யாசகம் வேண்டினார்.அதுவும் தன் பாதத்தின் அளவே போதும் என்றார்.
அப்போது மஹாபலிக்கு சற்று கர்வம் ஏற்பட்டது.
”வாமனா! உலகிற்கே அரசனாகும் என்னிடம் உன் குள்ளப் பாதச்சுவடுகளால் மூன்று அடி மண் வேண்டுவது கேவலம்! அதிகம் கேள்” என்றான்.
அதற்கு வாமனன், ”மஹாபலி! மூன்று அடி மண்ணால் திருப்திப் படாதவன் மனம் மூன்று உலகங்களைக் கொடுத்தாலும் திருப்தியே படாது!” - punch dialogue
மஹாபலி உணர்ந்த உண்மைகள் என்ன?
இந்த அறிவுரை மஹாபலியின் அறிவுக் கண்களைத் திறந்தது, தன் தவற்றையும் பேராசையையும் உணர்ந்தான்.சகல உலகிற்கும் அரசன் ஆனாலும் ஒரு நாள் தான் இறக்க வேண்டும் என்ற வாழ்க்கை நிலையாமையையும் உணர்ந்தான். தன் தாத்தாவின் உயர் பக்திக்குத் தான் அவமானம் தேட முற்பட்டதை எண்ணி எண்ணி வருந்தினான்.தான், தனது என்பதே உலகில் எதுவும் இல்லை என்பதை உணர்ந்தான்.வாமன வடிவில் இருக்கும் இறைவனின் உண்மைக்குத் தலை வணங்கினான்.
”வாமனா! உன் இஷ்டப்படி உனக்கு வேண்டி மூன்று அடி மண்ணை அளந்து கொள்” என்று மஹாபலி கூறினான்.
அப்போது வாமனன் ஸ்ரீமன்நாராயண வடிவம் தாங்கி முதல் அடியால் விண்ணையும், இரண்டாம் அடியால் சகல க்ரஹங்களையும் அளந்து கொண்டார்.மூன்றாவது அடிக்கு ஏதும் இல்லை.அப்போது மஹாபலி தன் ஆணவத்தை அவருக்கு மஹா பலியாக முன் வைத்துத் தலை குனிந்தான்.இறைவனும் அவனது தலை மீது பாதம் வைத்து அவனது பலியை ஏற்றார்.
மக்கள் மனம் மகிழ்ந்தனர்.ஆண்டு தோறும் மஹாபலி தன் தேசத்து ஜனங்களைக் காணும் நாளாக ஓணம் ஏற்கப்பட்டது.ஹஸ்த நாள் தொடங்கி பத்து நாட்கள் மலர்களால் கோலமிட்டு, பூஜைகள் செய்து, ஓணம் அன்று பாட்டும் ஆட்டமும் விருந்தும் கண்டு மன்னனும் மக்களும் கொண்டாடினர்.
அரசன் தன்னுடன் இறைவனையும் அழைத்துக் கொண்டே வருகிறான்.அதைக் குறிக்கவே கோலத்தின் நடுவில் மரத்தால், களி மண்ணான் ஆன திருகாட்கரை மஹாவிஷ்ணுவின் குறியீட்டை வைக்கிறோம். அது இல்லை என்றால் களி மண் உருண்டைகளையோ, விளக்கையோ வைக்க.
மாணவர்களுக்கு மீண்டும் மீண்டும் ஓணம் மூலம் உணர்த்த வேண்டிய வாழ்க்கைக் கல்வி:
எப்பொருளும் எனது அல்ல.
அனைத்துக்கு நான் ஆசைப் படக் கூடாது.
என்னிடம் உள்ளவற்றை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
பேராசை பெருநஷ்டம்.
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
எளிமையும் உண்மையான வாழ்க்கையும் மக்களிடையே மதிப்பை உண்டாக்கும்.
குரு என்பவர் தீய வழிகாட்டினாலும் அதைப் பின்பற்றக் கூடாது.
செயல்பாடுகள்:
வசதிக்கும் இடத்துக்கும் ஏற்ப பத்து நாட்கள் மலர்க்கோலம் இடுக.
விஷ்ணு சஹஸ்ரநாமம், பஜனைகள் செய்க.
மஹாபலி வரலாற்றைக் கதையாகக் கூறல், பொம்மலாட்டம் காட்டல், நாடகமாகச் செய்தல் ஆகியன மூலம் மாணவர்களுக்கு presentation தருக.
பாயாஸம் செய்து நைவேத்யம் செய்து பூஜை இடுக.
மஹாபலி வேடம் புனைந்து மாணவர்களை சில வசனங்கள் பேசச்செய்க.
ஊஞ்சலாட்டம், கேரள உடை அணிதல் ஆகியவற்றைக் காட்டுக.
பூக்களைக் கோலத்தில் இடும் போது ”என் எண்ணங்கள் நிறைவேற இறைவன் அருள் புரியட்டும்” என்ற ப்ரார்த்தனையுடன் அலங்காரம் செய்க. அப்போது ஆசிரியர்களும் மாணாக்கரும் ”ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹா” என்ற திருநாமம் ஜெபிப்பது மிக மிக நல்லது.
ஓணம் தொடர்பான பல அழகிய புகைப்படங்கள்ளை மாணாக்கருக்கு அவசியம் பார்த்திடத் தருக.